தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கினார் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா

 

Advertisement

சென்னை: இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜ்வாலா குட்டா, 30 லிட்டர் தாய்ப் பாலை தானமாக வழங்கியுள்ளார். கடந்த ஏப்ரலில் தாயான ஜ்வாலா, தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்காக, கடந்த 4 மாதங்களாக தாய்ப்பால் வங்கிகளுக்கு தானம் வழங்கி வருகிறார்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஜுவாலா கட்டாவும் ஒருவர் எனலாம். தற்போது ஜூவாலா கட்டா முக்கியமான முன்னெடுப்பு ஒன்றை எடுத்துள்ளார். 42 வயதான ஜூவாலா கட்டா கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தமிழ் நடிகர் விஷ்ணு விஷாலை கரம்பிடித்தார். ஜூவாலா கட்டா - விஷ்ணு விஷால் இணைக்கு நான்கு ஆண்டுகளுக்கு பின் கடந்த ஏப். 22ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பெண் குழந்தையை பெற்றெடுத்த ஜூவாலா கட்டா தற்போது தனது தாய்பாலை தானம் அளிக்க முன்வந்துள்ளார்.

அதாவது, அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்பாலை அவர் தானம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தாய் இன்றி ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு தாயாக உதவும் வகையில் ஜூவாலா கட்டா இந்த முன்னெடுத்துள்ளதார். இதுவரை அவர் அவர் சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினந்தினம் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஜூவாலா தாயாகி வருகிறார் எனலாம்.

ஜூவாலா கட்டா தனது குழந்தைக்கு தினம் தாய்ப்பால் கொடுத்த பின்னரே, அரசு மருத்துவமனைக்கு தானம் அளிக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பல தாய்மார்கள் செயல்பட்டு வந்தாலும், ஒரு விளையாட்டு வீராங்கனை மற்றும் பிரபலம் ஒருவர் இந்த முன்னெடுப்பை மேற்கொள்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிக அவசியமான ஒன்றாகும். குழந்தைகள் தாய்ப்பால் மூலமே ஊட்டச்சத்தை பெறுகிறார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளிடம் அதிகரிக்கும். இது குழந்தைகள் அலர்ஜிகள், ஆஸ்த்மா போன்ற பிரச்னைகளில் இருந்து தள்ளியிருக்க உதவும். குழந்தைகள் உடல் பருமன் அடையாமல் தடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், பல பச்சிளம் குழந்தைகளை காக்கும் இந்த முன்னெடுப்பு ஜூவாலா கட்டாவின் பெரும் பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.

 

Advertisement

Related News