வலு தூக்குதலில் இந்திய வீரர் ஆதர்ஷ் பரத் உலக சாதனை
Advertisement
டோக்கியோ: ஜப்பானின் ஹைமேஜி நகரில் வலு தூக்கும் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் பசிபிக் பிராந்திய பகுதியை சேர்ந்த வலுதூக்கும் வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த 55 கிலோ டெட் லிப்ட் பிரிவில் இந்திய வீரர் ஆதர்ஷ் பரத் 276 கிலோ எடையை தூக்கி உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் வீரர் ரேகி ராமிரஸ் 275.5 கிலோ எடையை தூக்கியதே உலக சாதனையாக இருந்தது. ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் பசிபிக் பிராந்திய வீரர்கள் பங்கு பெற்றுள்ள போட்டியில் இந்திய வீரர் உலக சாதனை படைத்திருப்பது மிகவும் சிறப்பானது என ஆதர்ஷை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Advertisement