இந்திய ராணுவத்தில் 379 இடங்கள்
இந்திய ராணுவத்தின் டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத பிரிவில் ராணுவ அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஷார்ட் சர்வீஸ் கமிஷனர் ஆபீசர்ஸ் (எஸ்எஸ்சி- டெக் 66 ஆண் மற்றும் எஸ்எஸ்சி- டெக் 66 பெண்).
மொத்த காலியிடங்கள்: 379 (ஆண்கள்- 350, பெண்கள்-29) (போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.).
சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.
வயது வரம்பு: 14.08.2025 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/டெலி கம்யூனிகேசன்/ஐடி/ஆர்க்கிடெக்சர்/ஏரோநாட்டிக்கல்/அவியோனிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/சாட்டிலைட் கம்யூனிகேசன்/ ரிமோட் சென்சிங்/பாலிஸ்டிக்ஸ் இன்ஜினியரிங்/நியூகிளியர் டெக்னாலஜி/லேசர் டெக்னாலஜி/ ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் அல்லது மேற்குறிப்பிட்ட பாடங்களை ஒரு பாடங்களை கொண்ட ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.இ.,/பி.டெக் படிப்பை முடித்து பட்டம் பெற இருக்கும் இறுதியாண்டு பொறியியல் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கு கலை, அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டம் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கு போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
பி.இ., படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல் கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதல் கட்ட தேர்வில் உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் 2ம் கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர் .சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சி ஏப்.2026ல் தொடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் வியூகங்கள் ஆய்வு (டிபென்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் ஸ்டரடிஜிக் ஸ்டடீஸ் எனும் வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர். பயிற்சி முடிந்ததும் இந்திய ராணுவத்தில் ‘லெப்டினென்ட்’ டாக பணியமர்த்தப்படுவர்.www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (14.08.2025).