இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பு வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட பேரழிவு: காங். தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், பிரதமர் மோடி அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் தோல்வியடைந்தார். இப்போது டிரம்ப் இந்தியாவை மிரட்டி கட்டாயப்படுத்துகிறார். கடற்படையின் அச்சுறுத்தல்கள் முதல் அணு ஆயுத சோதனைகளின் தடைகள் வரை, அமெரிக்காவுடனான உறவை நாங்கள் சுயமரியாதை மற்றும் கண்ணியத்துடன் வழிநடத்தியுள்ளோம்.
மோடி ஜிஅமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய நீங்கள் தவறிவிட்டீர்கள். உங்களுக்கு 6 மாதங்களுக்கும் மேலாக நேரம் இருந்தது. இப்போது. டிரம்ப் மிரட்டி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி சுமார் ரூ.7.51 லட்சம் கோடி(2024)ஆகும். 50 % வரி என்பது ரூ.3.75 லட்சம் கோடி பொருளாதாரச் சுமையைக் குறிக்கிறது. 50 % வரி விதிக்க டிரம்ப் எடுத்த முடிவு நமது வெளியுறவு கொள்கையின் பேரழிவு ஆகும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.