இந்திய விமானப் படையில் ஆட்சேர்க்கை: மாவட்ட ஆட்சியர் தகவல்
10:19 AM Aug 10, 2025 IST
சென்னை: அக்னிவீர் திட்டத்தில் இந்திய விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு வரும் செப்டம்பர் 2 முதல் 5ம் தேதி வரை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் நடக்க உள்ளது: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ்-2ல் 50% தேர்ச்சியுடன் 18 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆட்சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.