இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி
நெல்லை: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லையில் இன்று அளித்த பேட்டி: அதிமுக ஆட்சியிலும் பொறுப்பு டிஜிபிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், உத்தரப்பிரதேசத்தில் கூட 5 முறை பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் ஒன்றும் புதிதல்ல, தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் அதிமுக, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போதே வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியிடம் வெள்ளை அறிக்கையை வெளியிட கேட்கட்டும், அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் கொலை வழக்கில் ஓராண்டு கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. இந்தியா கூட்டணி வலிமையாகவும் இணக்கமாகவும் உள்ளது, ஏற்கனவே ஐந்து தேர்தல்களில் வெற்றி கண்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். போன்றோர் வெளியேறி உள்ளனர். இந்தியா கூட்டணியின் பலம் குறையவில்லை.
ஜி.கே.மூப்பனார் ஒருபோதும் பாஜவை ஆதரித்ததில்லை, அவரது ஆன்மா கூட பாஜகவை மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.