இந்தியாவின் யூகி இறுதிக்கு தகுதி
துபாய் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் இணை, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ், பிரிட்டனின் ஜேமி முர்ரே இணையுடன் மோதியது. இரு இணைகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் இரு செட்களில் தலா ஒன்றை இருவரும் கைப்பற்றினார். கடும் இழுபறியாக இருந்த 3வது செட்டை பாம்ப்ரி இணை கைப்பற்றியது. இதனால், 6-2, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் பாம்ப்ரி, பாபிரின் இணை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.