இந்தியாவில் ஒரே நாளில் ரூ.70.70 கோடி பணப்பரிவர்த்தனை நடந்து யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல்!!
டெல்லி : இந்தியாவில் ஒரே நாளில் ரூ.70.70 கோடி பணப்பரிவர்த்தனை நடந்து யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. இந்தியாவில் யுபிஐ மூலம் கடந்த 2ம் தேதி ஒரே நாளில் ரூ.70.70 கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இதனை நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உறுதி செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யுபிஐ பயன்பாடு புதிய மைல்கல் சாதனையை எட்டி உள்ளது. 2023ம் ஆண்டு உடன் ஒப்பிடும் போது, தற்போது யுபிஐ பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
அப்போது, 35 கோடியாக இருந்த தினசரி பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 50 கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது ரூ.70 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் ரூ. 65 கோடியாக இருந்த யுபிஐயில் தினசரி பணப்பரிவர்த்தனை கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி 70 கோடியை எட்டி உள்ளது. கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.