ஒருவரை அவதூறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பதால் என்ன பயன்: யூடியூபர் சங்கருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
Advertisement
புதுடெல்லி: தூய்மை பணியாளர்களை தொழில் முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறி யூடியூபர் சங்கரின் மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் கைதாகி உள்ளீர்களே.ஒருவரை அவதூறாக பேசிவிட்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதால் என்ன பயன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். சங்கர் மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசு, தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்துக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
Advertisement