பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்!
பீகார்: பீகார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் வலிவுறுத்தியுள்ளனர். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. ...
அரசுமுறை பயணமாக அக்.8ம் தேதி இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்!
இருநாள் அரசுமுறை பயணமாக வரும் அக்.8ம் தேதி பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருகிறார். இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ...
இந்தியாவில் விசாரிக்க கூடாது லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோடி புதிய வழக்கு
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார். கடந்த 2019ல் அவர் இங்கிலாந்தில் நாடு கடத்தல் வாரண்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து உச்ச நீதிமன்றமும் அவரை நாடு கடத்த ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்நிலையில், லண்டன்...
12 குழந்தைகள் பலி எதிரொலி கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் ஆய்வு: கேரளாவிலும் தடை விதிப்பு
திருவனந்தபுரம்: ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் 12 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து, 6 மாநிலங்களில் உள்ள கோல்ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (சிடிஎஸ்சிஓ) ஆய்வு நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. மபி, தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிப்...
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை: ஐதராபாத்தை சேர்ந்தவர்
ஐதராபாத்: அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் சுட்டு கொல்லப்பட்டார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி.நகரை சேர்ந்தவர் பொலே சந்திரசேகர்(27). பல் மருத்துவரான இவர் முதுநிலை பல் மருத்துவ மேற்படிப்புக்காக கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு உள்ள பல்கலைகழகத்தில் படித்து வந்த சந்திர சேகர் டெக்சாஸில்...
நாடு முழுவதும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 2000 ஐடிஐக்கள் மேம்படுத்தும் பணி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் 2000 ஐடிஐக்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பிலான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை டெல்லி விஞ்ஞான் பவனில் பிரதமர்...
ஆந்திராவில் புதிய திட்டம் அறிமுகம் 2.90 லட்சம் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி: ரூ.436 கோடி அரசு செலுத்தியது
திருமலை: 2.90 லட்சம் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் ஆட்டோ, கேப் மற்றும் மேக்ஸி கேப் டிரைவர்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று விஜயவாடாவின் சிங் நகரில்...
மகாராஷ்டிராவில் 2 நீதிபதிகள் சஸ்பெண்ட்
மும்பை: மகாராஷ்டிரா சதாரா மாவட்ட நீதிபதி தனஞ்செய் நிகாம் என்பவர், ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழுந்தது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ஒரு புகாரில் சிக்கிய பால்கர் மாவட்ட மூத்த சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்த இர்பான் ஷேக்கும் மும்பை உயர் நீதிமன்றத்தால் பணிநீக்கம்...
கருவி பழுதானால் டோல்கேட்டில் நவ. 15 முதல் இலவசம்
புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் கருவிகள் பழுதடைந்தால் கட்டணமின்றி பயணிக்கலாம், பாஸ்டேக் அபராதமும் குறைப்பு என வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நிவாரணங்களை அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ...