வாகனத்தின் மீது பாறை விழுந்து லடாக்கில் 2 ராணுவ வீரர்கள் பலி
Advertisement
லே: கிழக்கு லடாக்கில் கல்வானில் உள்ள துர்புக் அருகே உள்ள சார்பாக் என்ற இடத்தில் ராணுவ வீரர்களின் கான்வாய் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து உருண்ட வந்த பாறை ஒன்று வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் லெப்டினன்ட் கர்னல் பானு பிரதாப் சிங் மன்கோட்டியா உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாறை விழுந்த விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வடக்கு கமாண்ட் பிரிவு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
Advertisement