தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யுபிஐ மூலம் ரூ.40 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை; ஜிஎஸ்டி நோட்டீசால் பால், தயிர் விற்பனை நிறுத்தம்: பெங்களூருவில் வணிகர்கள் போராட்டம்

பெங்களூரு: மாநில வணிக வரித்துறை யுபிஐ மூலம் அதிக வருவாய் ஈட்டிய வணிகர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அந்த நோட்டீசை திரும்பப்பெற வலியுறுத்தியும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் கருப்பு பட்டை அணிந்து பால், டீ, காபி விற்பனையை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
Advertisement

கர்நாடக மாநில வணிக வரித்துறை சமீபத்தில், யுபிஐ பரிவர்த்தனை மூலம் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருவாய் ஈட்டிய 14,000 வணிகர்களுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பியது. அதனால் பதற்றமடைந்த சிறு வணிகர்கள், தங்கள் கடைகளில் வைத்திருந்த கியூஆர் கோடை அகற்றிவிட்டு, பணம் மட்டுமே பெறப்படும் என்று எழுதி ஒட்டினர். குறிப்பாக பெங்களூருவில் பெரும்பாலான கடைகளில் பணம் மட்டுமே பெறப்படுகிறது. 14,000 பேருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரமே பெரும் பரபரப்பை ஏற்படுத்த, வணிக வரித்துறை மேலும் 6000 பேருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பியது வணிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

வணிக வரித்துறையின் ஜிஎஸ்டி நோட்டீஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் நேற்று நூற்றுக்கணக்கான பேக்கரிகள், டீக்கடை உரிமையாளர்கள் பால், தயிர், டீ, காபி விற்பனையை நிறுத்தினர். அதனால் பொதுமக்கள் பால், தயிர் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் அலைந்தனர்.

பால் மற்றும் தயிர் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பல பால் கடைகளுக்கும் லட்சக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் தான், பால், தயிர் விற்பனையை நேற்று ஒரு நாள் மட்டும் அடையாள வேலைநிறுத்தமாக நிறுத்தியதாக வணிகர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் சித்தராமையாவை சிறுவணிகர்கள் குழுவாக சென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement