ஓரணியில் தமிழ்நாடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு
Advertisement
புதுடெல்லி: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை அணுகும் விதமாக ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. இதில், பொதுமக்களிடம் இருந்து ஓடிபி பெற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஓடிபி பெறும் விவகாரத்தில் பொதுமக்களிடம் எந்தவித வற்புறுத்தலும் செய்யப்படவில்லை. அவர்கள் தானாகவே தங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டு வருகின்றனர். ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Advertisement