ஸ்ரீ நாகம்மாதேவி கோயிலில் 33வது ஆண்டு பிரம்மோற்சவம்: வரும் 27ம் தேதி தொடங்கி ஆக 5ம் தேதி வரை நடக்கிறது
வரும் 28ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலச ஸ்தாபனம், நாகசாந்தி ஹோமம், மகாமங்களாரத்தி நடக்கிறது. 29ம் தேதி காலை 9 மணிக்கு நாக பஞ்சமி சண்டி பாராயணம், மாலை 6 மணிக்கு சண்டிகா ஹோமம், மகா மங்களாரத்தி நடக்கிறது. 30ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பகவதி சேவை நடக்கிறது. 31ம் தேதி காலை ஸ்ரீநாகம்மாதேவிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. ஆகஸ்ட் 1ம் தேதி காலை பொங்கல் வழிப்பாடு, பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
மாலை மா விளக்கு சேவை.ஆகஸ்ட் 2ம் தேதி ஸ்ரீசனிபகவான் மற்றும் ஸ்ரீஆஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 3ம் தேதி ஸ்ரீநாகம்மாதேவி பிரம்ம ரதவுற்சவம் நடக்கிறது. 4ம் தேதி வசந்த உற்சவமும், 5ம் தேதி ஊஞ்சல் சேவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீநாகம்மாதேவி டெம்பள் பப்லிக் சாரிடபல் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.