2 நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம்; பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றார்
Advertisement
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்,
‘‘இந்தியாவும், இங்கிலாந்தும் சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பரவியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மருடனான சந்திப்பின்போது இரு நாடுகளிலும் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்ட நமது பொருளாதார கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசையும் சந்திக்கிறார்.
Advertisement