பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆக.2ல் நிதியுதவி
Advertisement
இதில் வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி,இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் எம்.எல்.ஜாட் கலந்து கொண்டனர். இது குறித்து வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணை தொகை வழங்கும் விழா வரும் 2ம் தேதி வாரணாசியில் நடக்கிறது. இதில் பிரதமர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தவணை தொகை விடுவிக்கிறார். இந்த திட்டத்திற்கு ரூ.20,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 9.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
Advertisement