தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடாளுமன்றத்தில் அறிக்கை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உத்தரப்பிரதேசம் முதலிடம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 63 மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாகவும், இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஜூன் மாதத்திற்கான ஊட்டச்சத்து கண்காணிப்பு தரவுகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Advertisement

அந்த தரவுகளின்படி, நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில் அங்கன்வாடிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகள் நீண்ட காலத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை பெறாதபோது ஏற்படும் அவர்களின் வளர்ச்சி குறைகிறது.

அந்த வகையில், வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்ள 63 மாவட்டங்களில் 34 மாவட்டங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து மத்தியபிரேதசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதிக அளவிலான வளர்ச்சி குறைபாடுள்ள மாவட்டங்களில் மகாராஷ்டிராவின் நந்தூபார் (68.12%), ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் (66.27%), உபியின் சித்ரகூட் (59.48%), மபியின் சிவபுரி (58.20%), அசாமில் போங்கைகான் (54.76%) ஆகியவை முன்னிலையில் உள்ளன.

அங்கன்வாடிகளில் 0 முதல் 6 வயதுடைய 8.19 கோடி குழந்தைகளில் 35.91 சதவீதம் பேர் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்களாகவும், 16.5 சதவீதம் பேர் எடை குறைவாக இருப்பதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement