பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்விக்கு ராகுல் நிதியுதவி
Advertisement
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களது படிப்பைத் தொடர்வதற்காக முதல் தவணையாக கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அந்தக் குழந்தைகள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை இந்த உதவிகள் தொடரும்’ என்று தெரிவித்தார். முன்னதாக கடந்த மே மாதம் பூஞ்ச் பகுதிக்குச் சென்ற ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலைத் தயாரிக்குமாறு உள்ளூர் கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார். அதன்பேரில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 22 குழந்தைகளின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement