2 மாதம் நடந்ததை பாருங்கள் மோடி, டிரம்ப் நட்பு பொய்: காங்கிரஸ் விமர்சனம்
* மே 10ம் தேதி முதல் அதிபர் டிரம்ப் 25 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதற்கு தனிப்பட்ட முறையில் தலையிட்டதாகவும், அவர்கள் போரை நிறுத்தவில்லை என்றால் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றும் இந்தியாவையும், பாகிஸ்தானையும் அச்சுறுத்தினார்.
* ஜூன் 10ம் தேதி அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் தலைவர் ஜெனரல் மைக்கேல் குரில்லா தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அமெரிக்காவின் ஒரு அற்புதமான கூட்டாளியாக பாகிஸ்தானை பாராட்டினார்.
* ஜூன் 18ம் தேதி வெள்ளை மாளிகையில் பாக். ராணுவ தலைவர் பீல்ட் மார்ஷல் அசீம் முனிருடன் அதிபர் டிரம்ப் மதிய உணவு விருந்தை நடத்தினார்
* ஜூன் 19ம் தேதி சீனாவுக்கு பிரதமர் மோடி அளித்த தெளிவான அறிக்கை ஏற்கனவே இந்தியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டிரம்ப் உடனான பெருமை மிக்க நட்பானது இப்போது வெற்றுதனமானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.