கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை சரிந்தது: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
Advertisement
புதுடெல்லி: மக்களவையில் இதுதொடர்பான எழுத்துப்பூர்வ கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில்,’ 2024-25 ஆம் ஆண்டில் கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்ந்த புதிய மாணவர்களின் எண்ணிக்கை 1.39 லட்சமாக உள்ளது. இது 2023-24 ஆம் ஆண்டில் 1.75 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
2022-23 ஆம் ஆண்டில் புதிய சேர்க்கைகளின் எண்ணிக்கை 1.57 லட்சத்திற்கும் அதிகமாகவும், 2021-22 ஆம் ஆண்டில் 1.82 லட்சத்திற்கும் அதிகமாகவும், 2020-21 ஆம் ஆண்டில் 1.95 லட்சத்திற்கும் அதிகமாகவும் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 1,280 கேந்திரிய வித்யாலயா மையங்கள் செயல்பட்டு வருகின்றன’ என்றார்.
Advertisement