முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு
Advertisement
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், விசாரணையின்போது நடத்தப்பட்ட சோதனையில் பிரஜ்வலின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், பிரஜ்வல் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரது செல்போன் அவரிடம் இல்லை என்றும், அதனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் பிரஜ்வல் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் கூகுள் மேப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரமாகக் கருத முடியுமா என்பது குறித்தும், பிரஜ்வல் ரேவண்ணாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் விளக்கங்களை சமர்ப்பித்து தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பை ஆகஸ்ட் 1ம் தேதி நீதிபதி சந்தோஷ் தெக்கண்ணவர் ஒத்திவைத்தார்.
Advertisement