வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
ஜூன் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கியது. ஜூலை 25ம் தேதிக்குள் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்னர் மொத்தம் 7.93கோடி வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்தனர். தற்போது 7.23கோடி வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.
35லட்சம் நிரந்தரமாக இடம்பெயர்ந்தனர் அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை. 22 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். 7லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். 1.2லட்சம் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இப்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.