சென்னை மெட்ரோ 2ம்கட்ட பணிக்கான நிதி வேண்டும் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் வலியுறுத்தல்
இதனால் முழு செலவையும் தமிழ்நாடு அரசே செய்கிறது. இந்த தாமதம் காரணமாக மாநிலத்தின் நிதிநிலை கடுமையாக பாதிக்கிறது. ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சரிடம் இதைப் பற்றி கேட்ட போது, சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் அனுமதி சாத்தியக்கூறுகளைப் பொறுத்தது என பதிலளிக்கப்பட்டது. சென்னையின் மக்கள்தொகை 1.2 கோடி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சதுர கிமீக்கு 26,533 பேர் என்ற அடர்த்தியான மக்கள் தொகை காரணமாக சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் கடுமையாகி வருகிறது.
டெல்லி, பெங்களூரு போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் அவை சென்னையை விட சிறந்த மெட்ரோ நெட்வொர்க்கை கொண்டுள்ளன. சென்னையில் உள்ள மக்கள் தினமும் சுமார் 25 கிமீ பயணிக்கின்றனர். இது மற்ற பெருநகரங்களுக்கு இணையாக உள்ளது. எனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மெட்ரோ 2ம் கட்ட பணிக்கான நிதி உதவிக்கான கோரிக்கையை ஏற்கனவே விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு அறிவித்த நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.