கேள்விக்குப் பணம்: திரிணாமுல் எம்பி மஹுவா வழக்கில் சிபிஐ அறிக்கை
Advertisement
புதுடெல்லி: மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதான புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா கடந்த 2023 டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் 2024 தேர்தலில் மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கேள்விக்கு பணம் வாங்கிய புகாரில் எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனி ஆகியோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டு இருந்தது.
அந்த அடிப்படையில் சிபிஐ தனது அறிக்கையை நேற்று லோக்பாலிடம் தாக்கல் செய்துள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையை லோக்பால் முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement