பழுதாகி நின்ற பேருந்து மீது லாரி மோதல் - 6 பேர் பலி
12:09 AM Jul 16, 2024 IST
Share
ஆனந்த்: குஜராத்தில் டயர் வெடித்து நின்றிருந்த பேருந்தின் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். மேலும் 6 பேர் காயமடைந்தனர். குஜராத்தில் தனியார் பேருந்து ஒன்று அகமதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனந்த் நகர் அருகே அகமதபாத் - வதோதரா எக்ஸ்பிரஸ் சாலையில் பேருந்து வந்தபோது அதன் ஒரு டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை ஓட்டுனர் சமார்த்தியமாக நிறுத்தினார். பின்னர் பேருந்தில் இருந்த உதவியாளர் வெடித்த டயரை மாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் பேருந்து ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்தனர்.