9 ஆண்டுகளில் ரூ.12,08,828 கோடி வங்கி கடன் தள்ளுபடி: காங். தலைவர் கார்கே கண்டனம்
Advertisement
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘கடந்த ஒன்பது ஆண்டுகளில் கடன் தள்ளுபடி மூலமாக ஒன்றிய அரசு தனது பில்லியனர் நண்பர்களுக்கு ரூ.12லட்சம் கோடி மதிப்புள்ள இலவசங்களை விநியோகித்துள்ளது. நாட்டில் பொருளாதார சமத்துவமின்மை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. ஆனால் மோடி அரசு பொதுத்துறை வங்கிகளில் இருந்து லட்சக்கணக்கான கோடிகளை அதன் நண்பர்களுக்காக வீணடிக்கிறது. பணக்காரர்களுக்கு பயனளிப்பதற்காக ஏழைகளை கொள்ளையடிப்பது தான் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய மந்திரமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement