பெங்களூரு: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் திவ்யான்ஷி என்ற இளம்பெண்ணும் ஒருவர். இந்நிலையில், திவ்யான்ஷியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது தோடு திருடப்பட்டுவிட்டதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். திவ்யான்ஷிக்கு கிப்ட்டாக கொடுத்த தோடுகள் திருடப்பட்டதாக அவரது தாய் அஷ்வினி பெங்களூரு கமர்சியல் தெரு போலீசில் புகார் அளித்திருக்கிறார்.