இந்தியா மெர்சிடிஸ் கார் பாகிஸ்தான் டம்பர் லாரி: பாக். ராணுவ தளபதி விமர்சனம்
இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் புளோரிடாவின் டம்பாவில் உள்ள பாகிஸ்தான் புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றிய பாக். ராணுவ தளபதி அசிம் முனீர், ‘இந்தியா ஒரு மெர்சிடிஸ் போல ஜொலிக்கிறது, ஒரு பெராரி போல நெடுஞ்சாலையில் வருகிறது. ஆனால் நாம் சரளைக்கற்களால் நிரம்பிய ஒரு டம்பர் லாரி. லாரி காரில் மோதினால், யார் தோற்பார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று அளித்த பதில்: அசிம் முனீரின் இந்த கருத்துக்கள் பாகிஸ்தானின் தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலம். அவரது பேச்சுக்காக பாகிஸ்தானிலும், உலகெங்கிலும் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டார்.
இரண்டு நாடுகள் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றால், ஒரு நாடு, கடின உழைப்பு, நல்ல கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு பார்வை மூலம், பெராரி போன்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்பினால், மற்றொன்று இன்னும் ஒரு டம்பர் நிலையில் இருந்தால், அது அவர்களின் சொந்த தோல்வி என்று அனைவரும் கூறினர். பாகிஸ்தான் ராணுவத் தலைவர், தெரிந்தோ தெரியாமலோ, பாகிஸ்தான் அதன் தொடக்கத்திலிருந்தே பாதிக்கப்பட்டுள்ள ஒரு கொள்ளையடிக்கும் மனநிலையை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த மாயையை நாம் உடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதலில் அத்தகைய மாயை அவர்களின் மனதில் எழுந்திருக்கக்கூடாது. ஆனால் இந்தியாவின் செழிப்பு, நமது கலாச்சாரம் மற்றும் நமது பொருளாதார செழிப்புடன், நமது பாதுகாப்புத் திறன்கள் மற்றும் நமது தேசிய மரியாதைக்காகப் போராடும் மனப்பான்மை ஆகியவை சமமாக வலுவாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்’ என்றார்.