இந்தியாவில் 32 மருந்து மாதிரிகள் நிலையான தரம் இல்லாதவை
புதுடெல்லி: பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 32 மாதிரிகள் நிலையான தரம் இல்லாதவை என்று ஒன்றிய மருந்து ஆய்வகங்கள் கண்டறிந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 32 மாதிரிகள் நிலையான தரம் இல்லாதவை என்று பதிவிடப்பட்டுள்ளது. இதேபோல் மாநில மருந்து சோதனை ஆய்வகங்கள் இதே பிரிவின் கீழ் 62 மாதிரிகளை நிலையான தரம் இல்லாதவை என்று அடையாளம் கண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement