தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்தியா கூட்டணிக்கு வர தேமுதிகவுக்கு அழைப்பா?.. செல்வப்பெருந்தகை விளக்கம்

சென்னை: அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்காமல் இரண்டு இடத்திற்கும் அதிமுகவே வேட்பாளர்களை அறிவித்தது. மேலும், தேமுதிகவுடன் கூட்டணி தொடரும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா, ‘வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும’’ என்றார். இதனால், அதிமுக...

சென்னை: அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்காமல் இரண்டு இடத்திற்கும் அதிமுகவே வேட்பாளர்களை அறிவித்தது. மேலும், தேமுதிகவுடன் கூட்டணி தொடரும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்து பேசிய தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா, ‘வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும’’ என்றார். இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்தியா கூட்டணிக்கு தேமுதிகவை அழைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘மதுரை திமுக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதற்கு பிரேமலதா நன்றி தெரிவித்தார். தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்பீர்களாக என்று கேட்கிறீர்கள். இந்தியா கூட்டணிக்குள் யாரை வரவேற்க வேண்டும் என்பதை, கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார். அவ்வாறு எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த முடிவெடுத்தாலும் வரவேற்போம். இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று தேமுதிகவிற்கு நான் அழைப்பு விடுக்கவில்லை’’ என்றார்.

Related News