இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோரை தேர்வு செய்ய மும்பையில் இன்று குலுக்கல்
டெல்லி: இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோரை தேர்வு செய்ய மும்பையில் இன்று குலுக்கல் நடைபெறுகிறது. 'கடந்த ஆண்டைக் காட்டிலும் விண்ணப்பங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 2026-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் இன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் இந்தாண்டு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்' ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.