எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடரும்: அமைச்சர் ரகுபதி
சென்னை: எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடரும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
த.வெ.க. கேட்ட இடம் வழங்கப்பட்டது:
நீதிமன்ற அனுமதியின்படியே த.வெ.க. கேட்ட இடம் பரப்புரைக்கு வழங்கப்பட்டது. எந்த அரசியல் கட்சிக்கும் வழங்காத வகையில் தவெக கூட்டத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நடிகரை வேடிக்கை பார்ப்பதற்காகவே அங்கு மக்கள் குவிந்து இருந்தனர்.
காப்பாற்றியது திராவிட மாடல் அரசு
கரூரில் பாதிக்கப் பட்டவர்களை காப்பாற்றிய அரசு திராவிட மாடல் அரசு. மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசு எங்கள் அரசு. தோல்வி முகத்தோடுதான் வெளியே வந்து அதிமுகவினர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியால் எதையும் சாதிக்க முடியவில்லை.
அரசின் நடவடிக்கையால் மக்கள் காப்பாற்றப்பட்டனர்:
இரவோடு இரவாக அரசு எடுத்த நடவடிக்கையால் மக்கள் காப்பாற்றப்பட்டனர். எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும் திராவிட மாடல் ஆட்சி 2.0 தொடரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றிய திட்டங்களால் திராவிட மாடல் அரசு 2.0 தொடரும். எத்தனைபேர் சேர்ந்து வந்தாலும் அவர்களை வீழ்த்தும் சக்தி திமுகவுக்கு உண்டு.
பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது
மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கூடுதலாக மேஜைகள் அமைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. பல மாவட்டங்களில் இருந்து பிரேத பரிசோதனை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் விளக்கம் கூறியதில் என்ன தவறு? ரகுபதி
தண்ணீர் இல்லாத நேரத்தில் எங்கள் மாநாட்டிற்காக வைத்திருந்த தண்ணீரை நாங்கள் அளித்தோம். அரசு அதிகாரிகள் விளக்கம் கூறியதில் என்ன தவறு உள்ளது. காவல்துறையினர் 500 பேர் ஊர்க்காவல் படையினர் 160 பேர் என்று 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என தெரிவித்தார்.