இந்தியா மீது அமெரிக்க வரி விதித்தது சரியான நடவடிக்கை: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியா மீது அமெரிக்க வரி விதித்தது சரியான நடவடிக்கை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரைன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் செய்தியாளர்களிடம் பேசி அமெரிக்க வர்த்தகம் அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் வரி விதிகள் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதித்தல், ரஷ்யாமிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடும் என்றும் இதன் மூலம், ரஷ்யாவுக்கு கிடைக்கும் நிதி ஆதாயம் இல்லாமல் போய்விடும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா அமைச்சரின் இந்த கருது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதிப்பு நடவடிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும். ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என நினைக்கும் நாடுகள் அவர்களுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினர்.