தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு: இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு

 

Advertisement

நீலகிரி: கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டிலிருந்து 12.50 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது சற்று உயா்வு. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 12.46 கோடி கிலோவாக இருந்தது. வட இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 7.18 கோடி கிலோவிலிருந்து 7.94 கோடி கிலோவாக உயா்ந்துள்ளது.

அதேசமயம், தென் இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதி 5.28 கோடி கிலோவிலிருந்து 4.56 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், நடப்பாண்டின் முதல் பாதியில் தேயிலை ஏற்றுமதி ரூ.3,639.45 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.3,129.31 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு காலகட்டத்தில் தேயிலை ஏற்றுமதி விலை கிலோவுக்கு ரூ.251.21-லிருந்து ரூ.291.13-ஆக உயா்ந்துள்ளது.

முந்தைய 2024-ஆம் ஆண்டு முழுவதும் இந்தியாவிலிருந்து 25.62 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது உயா்வு. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 23.17 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலையின் அளவு அதிகரித்துள்ளது என்று இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 12.5 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பணப்பயிரான தேயிலை ஏற்றுமதி உயர்ந்து உள்ளது. முந்தைய நிதியாண்டை (2023-24) காட்டிலும் கடந்த நிதியாண்டில் (2024-25) 2.85 சதவீதம்வரை உயர்ந்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

2023-24 நிதியாண்டில் 25 கோடி கிலோ ஏற்றுமதி செய்யப்பட்டநிலையில், தற்போது அது 25.7 கோடி கிலோ ஆக அதிகரித்துள்ளது. வடஇந்தியாவில் தேயிலை ஏற்றுமதி 8.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. தென்இந்தியாவில் 4.92 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ.258-ல் இருந்து ரூ.290 வரை (12.65 சதவீதம்) அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகரித்து இருப்பதாகத் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் டீ, காபி பிரியர்கள் அதிகம். அதனால் தேயிலையின் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகரித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வட இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் தேயிலை உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும், சிறு குறு நடுத்தர தேயிலை விவசாயிகள் நடப்பாண்டில் அதிக அளவிலான தேயிலை உற்பத்தியை செய்து இருக்கின்றனர். தற்போது இந்தியாவின் மலைப்பகுதிகளில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக மாறி இருக்கிறது. இதனால் தேயிலை விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, எகிப்து, ஜெர்மனி மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகள் இந்திய தேயிலையின் முக்கிய வாடிக்கையாளர்களாகும். உயர்மதிப்புள்ள தேயிலை, சுகாதாரப் பொருட்கள், மற்றும் புவியியல் குறியீடுகள் (GI-tagged) பெற்ற தேயிலைகள் மீது உலகளாவிய சந்தையில் அதிகரித்த ஆர்வம், இந்திய தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது.

 

Advertisement

Related News