இந்தியா மீதான வரி இருமடங்கு உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
06:41 PM Aug 05, 2025 IST
வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் வரி உயர்த்தப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் வரி உயர்த்தப்படும். இந்தியா மீதான வரி இருமடங்கு உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை என்று கூறியுள்ளார்.