ஆப்கனுக்கு 21 டன் நிவாரணப் பொருட்கள்: இந்தியா அனுப்பி வைத்தது
புதுடெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா சார்பில் 21டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போர்வைகள், தற்காலிக கூடாரங்கள், சுகாதாரப்பொருட்கள், தண்ணீர் சேகரிப்பு பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் சக்கர நாற்காலிகள் உட்பட 21 டன் நிவாரணப்பொருட்கள் செவ்வாயன்று அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, வரும் நாட்களிலும் மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா அனுப்பிய நிவாரணப்பொருட்கள் விமானம் மூலமாக காபூலை சென்றடைந்தன.