ஆழமான மற்றும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்யாவையும் இழந்துவிட்டோம்: டிரம்ப் விமர்சனம்
வாஷிங்டன்: ஆழமான மற்றும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்யாவையும் இழந்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். உலகளவில் அரசியலில் இப்போது மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், டிரம்ப் நடவடிக்கையால் அமெரிக்கா மீது பல்வேறு நாடுகளும் அதிருப்தியில் உள்ளன. இன்னொரு பக்கம் சீனா வரிசையாகப் பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து வருகிறது.
அண்மையில் ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாடு சீனாவில் நடைபெற்றது. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றனர். அதே போல் சமீபத்தில் வடகொரிய அதிபரும் சந்தித்து பேசினார். இது உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார்.