தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவிற்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!!

டெல்லி : இந்தியாவிற்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்​தியா - ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெறுகிறது. இதில் பங்​கேற்க 2 நாள் பயண​மாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை டெல்லி வரு​கிறார். அவருக்கு குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் திர​வுபதி முர்மு சிறப்பு விருந்​துக்கு ஏற்​பாடு செய்துள்ளார். இந்த நிலையில், அதிபர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசுவது மரபாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.ஆனால், தற்போது வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போதும் அல்லது நான் வெளிநாடு செல்லும்போதும், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதை அரசு விரும்புவதில்லை. இந்தியா வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை, பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் எதிர்க்கட்சிகளிடமிருந்து விலக்கியே வைத்துள்ளது," இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News