இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது என்பதை பிரதிபலிக்கிறது உ.பி. தேர்தல் முடிவுகள்: சரத் பவார் பேட்டி
இந்த தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் பா.ஜ.க 75 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 இடங்களில் அப்னாதளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணி கட்சிகள் களத்தில் நின்றன. இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு உத்தரபிரதேசத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 45 இடங்கள் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 34 இடங்கள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவை பிரதிபலிக்கிறது உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது என்பதை உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. இந்தியா கூட்டணி முன்னிலையில் தான் உள்ளது. நிதிஷ் உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.