இந்தியாவில் 3வது முறையாக பிரதமர் மோடியின் ஓராண்டு நிறைவு: ஏ.சி.சண்முகம் வாழ்த்து
இதைத் தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற மோடி, அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வ நட்பு பாராட்டி வருகிறார்.இதன் தொடர்ச்சியாக, அண்மையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில், எந்தவொரு நாடும் பாகிஸ்தானை ஆதரிக்காததால் தனிமைப்படுத்தப்பட்டது. இது, பிரதமர் மோடியின் ராஜதந்திரத்துக்கு மிகப்பெரிய வெற்றியாகும். பயங்கரவாதத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட மரண அடியாகும்.
இனிவரும் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில், மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து பிரதமர் மோடி அரசால் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்திய தேசம் வலுவான, வளமான நாடாக என்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.