ஐரோப்பியா தொடரில் இந்தியா நெதர்லாந்திடம் மீண்டும் தோல்வி
Advertisement
அடுத்து பிரான்சிடம் விளையாடிய 2 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி, தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகளுடன் விளையாடிய தலா ஒன்று என்று 2 ஆட்டங்களிலும் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியது. கடைசியாக நெதர்லாந்திடம் விளையாடிய இந்தியா முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் மீண்டும் நெதர்லாந்துடன் மோதியது.
அதில் கோல் மழை பொழிந்த நெதர்லாந்து 8-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை மீண்டும் வீழ்த்தியது. இந்தியா அடித்த 2 கோல்களில் ஒன்று தமிழ்நாடு வீரர் செல்வம் கார்த்தி அடித்தது. அதனால் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் தான் விளையாடிய 8 ஆட்டங்களில் 3ல் வெற்றியும், 5ல் தோல்வியும் சந்தித்த இந்திய ஏ அணி நாடு திரும்புகிறது.
Advertisement