இந்தியாவில் தனியாக வாழும் முதியவர்கள் அதிகரிப்பு: உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் தவிப்பு!
டெல்லி: இந்தியாவில் வயதானவர்கள் தனியாக வாழ்வது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2017-18 கணக்கின்படி 60வயதுக்கு மேலானவர்களில் 5.7% பேர் தனியாக வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். இதில் 2011இல், 2% பேர் மட்டுமே இருந்தது. தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்த எணிக்கை அதிகமாக உள்ளது. தனிமையான சூழல் மனச்சோர்வு, மன அழுத்தத்தை ஏற்படுத்துவதால், வயதானவர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் தவிக்கின்றனர்.
பெரும்பாலும் கூட்டு குடும்பங்கள் குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வயதானவர்கள் ஒன்றாகக்கூடி பேசி உடற்பயற்சி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுவதே தனிமையை போக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது. வயதானவர்கள் தனிமையாக இருந்தாலும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் சமூகமும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே மிக முக்கியமானது.