இந்தியாவின் அந்நிய கடன் ரூ.65 லட்சம் கோடியாக உயர்வு: ஒன்றிய அரசு அறிக்கை வெளியீடு
டெல்லி: 2024 மார்ச் மாதம் 58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன் இந்த ஆண்டு 65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அந்நிய கடன் உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளாள் ஒன்றிய அரசு, 2024 மார்ச் 31ல் இருந்ததை விட நாட்டின் அந்நிய கடன் ஓராண்டில் 10.1% அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன், 2025ல் ரூ.64.87 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பது ஒன்றிய அரசின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அதில் அரசு வாங்கியுள்ள கடனை விட, நிறுவனங்களே அதிக கடன் வாங்கியுள்ளன. 2024 மார்ச்சில் ரூ.40.82 லட்சம் கோடியாக இருந்த நிறுவனங்கள் கடன், 2025ல் ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிதித்துறை சாராத தனியார் நிறுவனங்களின் அந்நிய கடன் மட்டுமே ரூ.23,05,709 கோடி என அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் அந்நிய கடன் 2024-25ன் ஒரே ஆண்டில் 13.3% அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. 2024 மார்ச்சில் ரூ.13.10 லட்சம் கோடியாக இருந்த அரசின் அந்நிய கடன் ரூ.14.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.