இந்தியா, சீனா, ரஷ்யாவுடன் கைகோர்த்த பிரேசில்? அமெரிக்காவை அதிர விட்ட பிரேசில் அதிபர்!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட பிரேசிலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் அதிபர் ட்ரம்ப். ஆனால் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பேசி கொள்வதாக பிரேசில் அதிபர் பதிலடி கொடுத்த சம்பவம் தான் ட்ரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அதே சமயம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ஆனால் இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ட்ரம்ப் மேலும் 25% கூடுதல் வரிகளை விதித்தார். இதன் மூலம் அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான வரி 50% அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்வினை ஆற்றியது, அதே சமயம் ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்க வரி விதிப்புக்கு கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் வரும் 15ஆம் தேதி ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதுமட்டும் இன்றி பிரதமர் மோடியை, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு வருகை தருமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக சீனா அதிபருடன் மோடி பேச்சுவார்தை நடத்துகிறார். அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு பல்வேறு நாடுகளை பாதித்துள்ளது. இந்தியாவை போல் பிரேசிலுக்கும் 50% வரி விதித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் ட்ரம்ப், இதற்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேச விரும்பும்படி பிரேசில் அதிபருக்கு அழைப்பு விடுத்தார் அதிபர் ட்ரம்ப். பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ,சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பேசிக்கொள்வதாக பிரேசில் அதிபர் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி உடனும் சீன அதிபர் ஜின்பிங் உடனும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது மட்டும் இன்றி ரஷ்ய அதிபர் புடின் உடனும் பேசியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்தும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தும் அவர் பேசியதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை ஏற்காமல் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட தலைவர்களுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம்தான் உலகம் அளவில் கவனம் ஈர்த்துவருகிறது.