தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவுடன் மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல்

 

Advertisement

டெல்லி: இந்தியாவுடன் மீண்டும் எல்லை வழி வர்த்தகத்தை தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தை தொடங்க சீனா ஒப்புதல். அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான பேச்சுவாா்த்தையின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஹிமாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

சீனாவுடனான வா்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவாா்த்தைகள் நடந்து வருகின்றன. ஹிமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா, உத்தரகண்டின் லிபுலேக், சிக்கிமின் நாதுலா ஆகிய மூன்று எல்லைப்பகுதிகள் வழியாக வா்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என ஒன்றிய அரசு சீனாவிடம் பேசி வருவதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஹிமாசல பிரதேச அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

ஷிப்கி லா கணவாய் வழியாக வா்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு மத்திய அரசுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்ததாகவும், அவரது முயற்சிக்கு பயன் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வா்த்தகம் மட்டுமல்லாமல், கைலாஷ் மானசரோவா் யாத்திரையையும் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச அரசின் கோரிக்கைக்கும் சீனா சாதகமாகப் பதிலளித்துள்ளது.

திபெத்தில் உள்ள தாா்சென் மற்றும் மானசரோவா் பகுதிகளுக்குச் செல்வதற்கு, இந்த ஷிப்கி-லா பாதை எளிதாகவும், குறுகியதாகவும் உள்ளது. ஷிப்கி லா கணவாய் வா்த்தகப் பாதையை மீண்டும் திறப்பதற்கான அனைத்து பணிகளையும் ஒன்றிய வா்த்தக அமைச்சகத்துடன் இணைந்து செய்து வருவதாகவும் ஹிமாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

ஷிப்கி லா கணவாய், பண்டைய காலத்தில் புகழ்பெற்ற பட்டுப் பாதையின் ஒரு பகுதியாக இருந்தது. 1994-ஆம் ஆண்டு இந்தியா-சீனா ஒப்பந்தத்தின்கீழ் இது அதிகாரபூா்வ வா்த்தகப் புள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வா்த்தக பாதை மீண்டும் திறக்கப்படுவது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதோடு, எல்லையோர மக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவியாக இருக்கும்.

 

Advertisement

Related News