இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கடத்தல்: ஒன்றிய அரசு விசாரிக்க உத்தரவு
டெல்லி: நாட்டின் 8 நிமித்தத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவதாக வெளியான செய்தி கவலை அழைப்பதாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் இது குறித்து சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்துமாறு ஒன்றிய அரசுக்கு சூரிய ஸ்வயம் சேவி சன்ஸ்தான் என்ற தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்துள்ளது. அதில் இந்தியாவில் கடத்தப்பட்டும், காணாமல் போயும் இன்னும் மீட்கப்படாத குழந்தைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்தன, மகாதேவன் ஆகியோரை கொண்டன அமர்வு முன்பான விசாரணைக்கு வந்தது.
அப்போது காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் கண்காணிப்பில் ஒரு வலைத்தளம் தொடங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டன. மேலும் மாயமான குழந்தைகள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு அதிகாரியை டிசம்பர் மாதம் 9ஆம் தேதிக்குள் நியமிக்கவேண்டும் என்றும் அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கடத்தப்படுவதாக வெளியான செய்தி மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சட்ட விதிகளை ஒன்றிய அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.