50% வரியால் உறவில் விரிசல்; இந்தியா, அமெரிக்கா இணைந்து தீர்வு காணும்: நிதி அமைச்சர் பெசன்ட் நம்பிக்கை
நியூயார்க்: அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் பெரும்பாலும் கவனத்தை ஈர்ப்பதற்கானது. எப்படியிருந்தாலும், சீனா, ரஷ்யாவை விட எங்களைத்தான் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியா, அதிகம் நம்புகிறது. எனவே இரண்டு பெரிய நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பிரச்னைகளுக்கு தீர்வு காணும்.
ரஷ்ய எண்ணெயை வாங்கி அதை மறுவிற்பனை செய்து, ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு எண்ணெய் ஊற்றும் இந்தியாவின் செயல் நல்லவிதமாக இல்லை. வர்த்தக பேச்சுவார்த்தையில் இந்தியா மெதுவான முன்னேற்றத்தை காட்டியதும் அவர்கள் மீது வரியை உயர்த்துவதற்கான கூடுதல் காரணமாக அமைந்தது. ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிராக தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறார். எனவே ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதற்கான அனைத்து விருப்பங்களையும் நாங்கள் மிக நெருக்கமாக ஆராய்வோம் என்றார்.