தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை 81% குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயி​ரிழப்​போரின் எண்​ணிக்கை 81% குறைந்​துள்​ளதாக ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. உலக எய்ட்ஸ் நோய் தினத்​தை யொட்டி, ‘இந்​தியா          எச்​ஐவி உத்​தேசம் 2025’ என்ற பெயரில் நடத்திய ஆய்வு முடிவு​களை ஒன்றிய சுகா​தார அமைச்​சர் ஜே.பி. நட்டா நேற்று முன்​தினம்  வெளி​யிட்​டார். அதில்,"2010-ம் ஆண்​டிலிருந்து எடுக்​கப்​பட்ட புள்ளி விவரத்​தின்​படி இந்​தி​யா​வில் எய்ட்ஸ் நோயால் உயி​ரிழப்​போரின் எண்​ணிக்கை 81% குறைந்​துள்​ளது. மேலும், இந்த நோயால் பாதித்​தோரின் எண்​ணிக்கை 0.2 % அளவுக்கு உள்​ளது. அது​மட்​டுமல்​லாமல், புதி​தாக எச்​ஐவி நோய்த் தொற்​றால் பாதிப்​போரின் எண்​ணிக்கை 49% குறைந்​துள்​ளது.

Advertisement

மிசோரம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்​களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்​கப்​பட்​டோரின்

எண்​ணிக்கை ஒரு சதவீதம் அளவுக்கு உள்​ளது. தேசிய அளவில் பாதிக்​கப்​பட்ட மக்​களின் சதவீதத்​துடன் இதை ஒப்​பிடும்​போது இது 5 மடங்கு அதி​க​மாகும். அதே​போல் மேகால​யா, பஞ்​சாப் மாநிலங்​களி​லும் போதைப்​பொருள் பழக்​கம், பாலியல் பிரச்​சினை​களால் இளம் வயதினரிடையே எச்​ஐவி பாதிப்பு அதிக அளவில் உள்​ளது. நாட்​டில் சுமார் 6.6 கோடி பேருக்கு எச்​ஐவி பாதிப்பு குறித்து சோதனை நடத்​தப்​பட்​டது. தற்​போது எச்​ஐவி பாதிப்​பால் சிகிச்சை பெறு​வோரின் எண்​ணிக்கை 14.9 லட்​சத்​திலிருந்து 18.6 லட்​ச​மாக அதி​கரித்​துள்​ளது.

புதி​தாக எச்​ஐவி பாதிப்​போர் 35% குறைந்​துள்​ளது. அதே​போல் எச்​ஐவி பாதிப்​பால் உயி​ரிழப்​போரின்

எண்​ணிக்​கை​யும் 69 சதவீத​மாக குறைந்​துள்​ளது.இந்​தி​யா​வில் 2024-ம் ஆண்டு எடுக்​கப்​பட்ட புள்​ளி   ​விவரத்​தின்​படி 25.6 லட்​சம் மக்​கள் எச்​ஐவி பாதிப்​புடன் வாழ்ந்து வரு​கின்​றனர். இதில் 14 லட்​சம் ஆண்​கள், 11 லட்​சம் பெண்​களும் அடக்​கம். நாட்​டில் உள்ள எச்​ஐவி நோயாளி​களில் 74% பேர் மகா​ராஷ்டி​ரா, ஆந்​தி​ரா, கர்​நாடகா ஆகிய  மாநிலங்​களில் வசிக்​கின்​றனர். இவ்​வாறு அந்​த ஆய்​வில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Advertisement