தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார்

Advertisement

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகளை வழங்குகிறார். நாட்டின் 78வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று டெல்லி கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றுவார். அந்தந்த மாநில முதல்வர்கள் தலைநகரில் தேசியக்கொடியை ஏற்றி வைப்பார்கள். அதன்படி, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 15ம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சென்னை கோட்டையில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கோடி ஏற்றி வைக்கிறார்.

விழா மேடையில் தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக `தகைசால் தமிழர்’ என்ற பெயரிலான விருது, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். இந்த விருதுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடையிலேயே வழங்கி கவுரவிக்கிறார்.

முன்னதாக, காலை 8.45 மணிக்கு சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்பார். முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைப்பார். இதையடுத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்வர் வந்து, தேசியக்கொடியை ஏற்றி வைத்து தேசியக்கொடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வணக்கம் செலுத்துவார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துவார். இந்த விழாவுக்கு வருகை தரும், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்காக புனித ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்புறம் உள்ள பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவில் பங்கேற்கும் அமைச்சர்கள், எம்பிக்கள், எல்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக தனித்தனி மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரவு-பகலாக இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலக பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பும் செய்யப்பட்டு உள்ளது.

சுதந்திர தினவிழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சியும் கோட்டை கொத்தளத்தில் நடத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை மோட்டார் சைக்கிள் புடைசூழ காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளை நிற போலீஸ் திறந்த ஜீப்பில் ஒருவரை நிறுத்தி அணிவகுப்புகளை பார்வையிடுவது போன்றும், குதிரைப்படை, கமாண்டோ படை, ஆயுதப்படை உள்ளிட்ட 7 படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்றும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோட்டை கொத்தளத்தில் விருதுகள், பதக்கங்கள் வழங்குவது போன்றும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பஸ்நிலையம், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement