சுதந்திர தின வாழ்த்து கூறிய உக்ரைன் அதிபருக்கு மோடி நன்றி
புதுடெல்லி: இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரதமர் மோடி நேற்று நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில், ‘‘உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. உக்ரைனில் உள்ள எங்கள் நண்பர்கள் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புடன் கூடிய எதிர்காலத்தை பெற மனமார வாழ்த்துகிறோம்’’ என கூறி உள்ளார். இதே போல, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘இந்தியா-இஸ்ரேல் நட்புறவு தொடர்ந்து செழிக்கட்டும். இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தி, நமது மக்களுக்கு அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவரட்டும்’’ என கூறி உள்ளார்.